கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை
X
தேசிய பசுமை தீர்ப்பாயம்- நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணர்குழு உறுப்பினர் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி நிபுணர்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது. கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜா வைத்தியநாதன் சட்டப்படி தேவைப்படும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று கூறிய தலைமை நீதிபதி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?