தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் பார்களை மூட ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் பார்களை மூட ஐகோர்ட் அதிரடி உத்தரவு
X
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டுமென்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், 2019-2021ம் ஆண்டு முதல், டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர், டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்தும், தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தங்களது மனுவில், பெருந்தொற்று பரவலால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தன. இதனால், தங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தங்களது உரிமத்தை கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென்று, கேட்டிருந்தனர்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி உள்ளது; டாஸ்மாக் நிர்வாகமே பார்களை நடத்த அனுமதியில்லை. டாஸ்மாக் கடை அருகே உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை, ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும். பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம், கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்வதாக, நீதிபதி சரவணன், தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!