தொடர்ந்து பெய்யும் கனமழை: 5 மாவட்டங்களில் 10 நிவாரண முகாம்கள்
தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 314 நபர்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு
1.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 43 குடும்பங்களைச் சார்ந்த 128 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,
2. திருவண்ணாமலை மாவட்டத்தில், 15 குடும்பங்களைச் சார்ந்த 71 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
3. செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 குடும்பங்களைச் சார்ந்த 79 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும்,
4. திருவள்ளூர் மாவட்டத்தில் 9 குடும்பங்களைச் சார்ந்த 36 நபர்கள் 1 நிவாரண முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சேத விபரம்:
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை , தேனி, மதுரை மாவட்டங்களில் 4 நபர்கள் உயிரிழந்துள்னர். மேலும், 16 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 237 குடிசைகள் பகுதியாகவும், 26 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 263 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 65 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 70 வீடுகள் சேதமடைந்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu