தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி இருந்தன. மேட்டூர் அணையும் மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நிறைந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலையில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் அவதி அடைந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 122 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவு மேக வெடிப்பு போன்று ஒரு நாள் முழுவதும் பலத்த மழை பெய்தது. அதனால் சீரிகாழி நகரமே வெள்ளக்காடாது. அது மட்டும் அல்ல சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்கில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பள்ளி கட்டிடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சீர்காழி பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு தலா ரூ.1000 நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் நவம்பர் 19, 20ஆகிய தேதிகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 19 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் மழை படிப்படியாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் வரும் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
16ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17.11.2022 மற்றும் 18.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu