தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்: ஆரஞ்சு அலர்ட்!

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும்: ஆரஞ்சு அலர்ட்!
X

வானிலை ஆய்வு மைய வரைபடம்.

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (11ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (12ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 13ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14ம் தேதி உள் தமிழகம், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story