/* */

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை
X

பைல் படம்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை 3 நாட்களுக்கு தொடரும். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (1-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

நாளை மறுநாள் (2-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தில் அதிகபட்சமாக காவேரிபாக்கத்தில் 6 செ.மீ, திருத்தணியில் 5 செ.மீ., வால்பாறையில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 30 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்