/* */

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நாளை விசாரணை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
X

செந்தில் பாலாஜி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்த நிலையில், நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அப்போது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில்தான் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 11 Oct 2023 5:02 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  2. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  3. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  4. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  5. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  6. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  7. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  8. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  10. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை