இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்..!

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்..!
X

இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவதாக போற்றப்படுவது .

இஸ்லாமிய மாதங்களில் ரமலான் மாதம் நோன்பு நோற்கும் மாதம். திருக்குரான் அருளப்பட்ட மாதம் இதுதான். அந்த மாதம் முழுமையும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று இறைவனை வழிபட்டு பிறர்க்கு உதவுவதை கடமையாக கொண்டுள்ளனர்.

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.


ரமலான் நோன்பு உண்மையான இறை அச்சத்தோடும், மனத்தூய்மையுடனும் இருப்பதால் அது மிகவும் போற்றப்படுகிறது.. சூரியோதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உணவும் பானமும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் புனிதமான எண்ணங்களால் அர்ப்பணித்து தொழுகை செய்கின்றனர்.

பசியும், தாகத்தையும் கட்டுப்படுத்துவது போல, மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள நமக்கு வலிமையை அருள்கிறது இந்த நோன்பு.

பொருள் உதவி தேடுபவர்களுக்கு பொருள் உதவியும், உடல் உழைப்பு தேடுபவர்களுக்கு உதவியும், பசித்தவருக்கு உணவும், தவித்தவருக்கு நீரும், ஆடை இல்லாதவருக்கு ஆடையும், உடல் திறன் முடியாதவர்களுக்கு தேவையான உதவியும், கல்வி உதவியும், ஏழை - எளிய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் உதவுங்கள்.. அல்லா உதவி செய்வதை விரும்புகிறான் என்று மனித நேயத்தையும், அன்பையும் போதிக்கிறது இந்த புனித ரமலான் மாதம்.

ஒரு மனிதனின் இன்பத்திலும், துக்கத்திலும் பங்கு கொண்டு, பேரிடர் காலங்களில் உதவிகள் செய்து நோன்பு நோற்கும், இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை போற்றி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம். இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!