மலர்ந்தது 2022 புத்தாண்டு: எளிமையான முறையில் கொண்டாட்டங்கள்

மலர்ந்தது 2022 புத்தாண்டு: எளிமையான முறையில் கொண்டாட்டங்கள்
X
ஆங்கில புத்தாண்டு 2022, மலர்ந்துள்ளது. மகிழ்ச்சியான இத்தருணத்தை, எளிமையாக கொண்டாடி, பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்

இன்று, ஆங்கிலப் புத்தாண்டு, 2022 மலர்ந்துள்ளது. இதனை வரவேற்கும் வகையில், நள்ளிரவு மணி 12 மணியளவில், வாண வேடிக்கைகளுடன், பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடி வரவேற்ற்னார். எனினும், ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் புத்தாண்டு பிறந்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக, சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், வழக்கமாக களை கட்டியிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், இம்முறை தொற்று பரவல் கட்டுப்பாடுகளால், எளிமையாகவே கொண்டாடப்பட்டன.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நட்சத்திர ஓட்டல்கள், பொது இடங்கள், கடற்கரை உள்ளிட்டவறை வெறிச்சோடி கிடந்தன. எனினும், பட்டாசுகளை வெடித்து ஆங்காங்கே கேக் வெட்டி, எளிமையாக புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர். கோவில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பரஸ்பரம் இனிப்புகள் வழங்கி, பொதுமக்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

புத்தாண்டு பிறந்துள்ள வேளையில், வாசகர்கள் அனைவருக்கும் இன்ஸ்டா நியூஸ் இணையதளம், மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. வளமும், நலமும், வெற்றிகளையும் இப்புத்தாண்டு நல்கட்டும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!