சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு
X

பைல் படம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நான்காவது நாளாக நாளையும் டிச. 7 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு நாளை தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இந்த நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!