ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை

அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55% ஆக உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் சரக்கு & சேவை வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக் நேற்று தகவல்கள் எழுந்தன. அதன்கீழ் 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்தவது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்தை ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, அப்பளம், வெல்லம், பவர் பேங்க், கை கடிகாரம், சூட்கேஸ், ஹேண்ட் பேக், வாசனை திரவியங்கள், தொலைக்காட்சி பெட்டி (32 இன்ச் கீழ் உள்ள டிவி), சாக்லெட், சூவிங்கம், வால் நட், குளிர் பானங்கள், சிங்க் (பாத்திரம் கழுவும்), வாஷ் பேஷன், கண்ணாடிகள், காதணிகள், தோல் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ஆடைகள், வீடியோ கேமரா, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டு, மின் சாதனங்கள், சவரம் பொருட்கள், ஹேர் ட்ரிம்மர் என மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதிலும், குறிப்பிட்ட 143 பொருட்களில் 92% பொருட்களின் சரக்கு மற்றும் சேவை வரி என்பது 18%-லிருத்து 28% ஆக அதிகரிக்க மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. வரி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பொருட்களில் பெரும்பாலானவை கடந்த 2017-ஆம் மக்களவை தேர்தலுக்கு முன்னர் வரி குறைக்கப்பட்ட பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களிடம் இது குறித்து எந்த கருத்தும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கு மேற்பட்ட பொருட்களுக்கு அதிகபட்ச வரியான 28 சதவீதத்துக்கு உயர்த்தும் திட்டம் இல்லை எனவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu