ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்துமாறு இளையராஜாவுக்கு இறுதி சம்மன்
இசையமைப்பாளர் இளையராஜா
சென்னையில் உள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று ரூ.1.87 கோடி சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக கடந்த மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உடன் எடுத்து வரவேண்டும் என்றும் கூறி முதல் முறையாக இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பியது. .
அதைத்தொடர்ந்து மீண்டும் மார்ச் 21ஆம் தேதி மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது.
அதனைத்தொடர்ந்து தற்போது வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி இளையராஜாவுக்கு 3 வது முறையாகவும் சம்மன் அனுப்பப்பட்டதாக ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் 3 சம்மன்களுக்கும் இளையராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், தற்போது அவருக்கு இறுதி நோட்டீஸை அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளையராஜா வரி பணத்தோடு சேர்த்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கட்டணத்தை பெற்றுள்ளார் என்றும் ஆனால் அந்த வரியை அவர் ஜிஎஸ்டி ஆணையத்திடம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu