வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப்-12

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப்-12
X

பைல் படம்.

என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-01 என்ற வழிகாட்டி செயற்கைகோள், 18 நிமிடங்கள் 37 நொடிகளில் வெற்றிகரமாக புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்றும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!