தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
X

கோப்புப்படம்

சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்துள்ளோம் என்று தெரிவித்த நிதியமைச்சர், 62 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை, 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாகவும் இலக்குகளில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சி துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், “தாளமுத்து நடராசனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். தமிழ் மொழி உலக மொழியாக திகழ பண்பாட்டு மாநாடு நடத்தப்படும். தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க பயணங்கள் ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியை வளர்க்க பண்பாட்டு தமிழ் மாநாடு நடத்தப்படும். 591 தமிழ் அறிஞர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். சங்கமம் கலை பண்பாட்டு திருவிழா மேலும் இரண்டு நகரங்களில் நடத்தப்படும். சென்னை சங்கமம் கலை விழா மேலும் 9 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!