IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும்

IIT நுழைவுத் தேர்வில் வென்ற ஏழை மாணவனின் கல்விச் செலவை அரசு ஏற்கும்
X
அரசுப் பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பொன்னழகன்-பூவாத்தாள் ஆகியோரது மகன் அருண்குமார் செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

அருண்குமார் இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில், எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவர் அருண்குமாரை இன்று தலைமை செயலகத்தில் நேரில் வரவழைத்து பாராட்டிய முதலமைச்சர், அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!