கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்

னியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
X

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். (கோப்பு படம்).

கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜம் புயலால் பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, தங்களின் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து லட்சக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் எனும் தனியார் நிறுவன கார்பந்தயத்தை வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது புயல் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கடும் கோபமடையச் செய்திருக்கிறது.

உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடுத்த உடையின்றி என எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி சிரமத்திற்குள்ளாகியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மக்கள் வரிப்பணமான 40 கோடி ரூபாயை செலவு செய்து கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ?

கார்பந்தயம் நடத்த இருங்காட்டு கோட்டையில் மைதானம் இருக்கும் போது ஓமந்துரார் அரசு மருத்துவமனை, அண்ணா சாலை, துறைமுகம் என பரபரப்பாக இயங்கும் சாலைகளை மறித்து தனியார் கார்பந்தயத்தை நடத்தி இடையூறு ஏற்படுத்துவது தான் அரசின் சாதனையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறும் திமுக அரசு, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்வதோடு, கனமழையால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Dec 2023 6:38 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Variation Of Apartment And Individual House தனி வீடுகளுக்கும்...
 2. லைஃப்ஸ்டைல்
  Preparation Of Vegetable Briyani சுவையான வெஜிடபுள் பிரியாணி செய்வது...
 3. டாக்டர் சார்
  Reason For Diabetis And Precaution சர்க்கரை நோயை முற்றிலும்...
 4. உலகம்
  உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் மூன்று இந்தியர்கள்
 5. தாராபுரம்
  தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு
 6. உலகம்
  போர் பயிற்சிக்காக மாலத்தீவிற்கு விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Papaya ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்...
 8. உடுமலைப்பேட்டை
  குப்பைக்கு தீ வைப்பதாக உடுமலை நகா்மன்ற கூட்டத்தில் புகாா்
 9. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையை மாற்றிக் காட்டும் சில தத்துவங்கள் - என்னவென்று...
 10. இந்தியா
  விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி...