தீபாவளிக்கு மறுநாள் உள்ளூர் விடுமுறை அளித்தது தமிழக அரசு

தீபாவளிக்கு மறுநாள் உள்ளூர் விடுமுறை அளித்தது தமிழக அரசு
X
தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அரசு உத்தரவு

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட வசதியாக, நவம்பர் 5 வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வந்தது.

அக்கோரிக்கைகளை ஏற்று தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 5அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ.20 அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!