கொரோனா 2ம் அலையை சமாளித்த அரசுக்கு பாராட்டு: பேரவையில் ஆளுனர் உரை

கொரோனா 2ம் அலையை சமாளித்த அரசுக்கு பாராட்டு: பேரவையில் ஆளுனர் உரை
X
ஆளுநர் ரவி 
தமிழக சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது.

ஆண்டின் தொடக்கத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது மரபாகும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், இன்று தொடங்கி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்றைய கூட்டம் தொடங்கியது. இதில், தற்போது ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றி வருகிறார். வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு, தனது உரையை ஆளுனர் தொடங்கினார். அவரது உரையின் சாராம்சங்கள் வருமாறு:

முதல்வருக்கு பாராட்டு

கொரோனா இரண்டாம் அலையை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. இதற்கான முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில், நாட்டிற்கே தமிழகம் முன்னோடியாக உள்ளது. கொரோனா நோயாளிகள் 33,117 நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்

ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம் நடத்தி, தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரிக்கு இழப்பீடு குறைந்தபட்சம் 2024, ஆம் ஆண்டு வரையிலாவது மத்திய அரசு வழங்க வேண்டும்.

இலங்கை தமிழர் நலன்

இலங்கை சிறையில் உள்ள 68, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர் நலன் காக்கப்படும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது. 145, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் புதுப்பிக்கப்படும்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய, மத்திய அரசு உடனே நிதியை விடுவிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவுக்கும் நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணப்படும். அதே நேரத்தில் தமிழக உரிமைகள் விட்டுக் கொடுக்கப்படாது. மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை அனுமதிக்க முடியாது. இதற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது. என்று ஆளுனர் ரவி தெரிவித்தார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself