ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததால் தமிழகத்தில் 12 சிறைவாசிகள் விடுதலை

ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததால் தமிழகத்தில் 12 சிறைவாசிகள் விடுதலை
X

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததால் தமிழக சிறைகளில் இருந்து 12 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று நீண்ட கால சிறைவாசிகள் 12 பேரை சிறையில் இருந்து விடுவிக்க ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் நீண்ட கால சிறைவாசிகள் 12 பேர் விடுதலை செய்ய செய்ய தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்தாண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்து இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை தற்போது ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளா

இதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் சிறைகளில் இருந்து 12 சிறைவாசிகளையும் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை சிறையில் இருந்து அபுதாஹீர், விஸ்வநாதன், பூரி கமல், ஹரூன் பாஷா, சாகுல் ஹமீது, பாபு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன், புழல் சிறையில் இருந்து ஜாஹிர் ஆகியோரை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!