குடியரசு தின விழா: கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றினார்
நாட்டின் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது.
காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். அவரின் காரின் முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. தொடர்ந்து ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் ஆகியோர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu