தமிழக அரசின் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ஏலத்தில் விற்பனை
Independence Day Drama in Tamil
தமிழ்நாடு அரசு, ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள - கோட்டை அலுவலகத்தில் பிப்ரவரி 01, 2022 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) பிப்ரவரி 01, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த தகவலை நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu