அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசு அறிவிப்பு

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசு அறிவிப்பு
X

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு

தமிழக அரசின் ஊக்கத்தொகை அறிவிப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசாக அமைந்தள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முதலமைச்சர் 7-9 -2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.

அரசுப் பணியாளர்கள் தங்கள் பணி காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசு பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவர்களுடைய பணி திறன் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு உயர்கல்வி தகுதிகளுக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் தற்போது முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டும் முறைகளின்படி மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய தொகை வழங்கப்பட இருக்கிறது. இதன்படி முனைவர் (பி.எச்.டி) படிப்பிற்கு ரூ. 25 ஆயிரமும், பட்டமேற்படிப்பு பி.ஜி. அல்லது அதற்கு சமமான படிப்புக்கு ரூ. 20 ஆயிரமும், பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பிற்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும்.

அரசு பணியாளர் ஒருவர் பணியில் சேர்ந்த பிறகு கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் . இந்த ஊக்கத்தொகையானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் அரசுப் பணியாளரின் பணி காலத்தில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

ஒரு அரசு பணியாளர் கூடுதல் கல்வித் தகுதி பெற்ற ஆறு மாத காலத்திற்குள் ஊக்கத் தொகை பெற உரிமை கோரவேண்டும். வருகிற 10 -3- 2020 அல்லது அதற்கு பிறகு கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு இந்த ஊக்கதொகை அனுமதிக்கப்பட வேண்டும்.

இவர் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தித்திக்கும் தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!