/* */

அரசு கேபிள் டிவி சேவை பாதிப்பு: தொழில் நுட்ப உதவி எண்கள் அறிவிப்பு

அரசு கேபிள் டிவி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்நுட்ப உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

அரசு கேபிள் டிவி சேவை பாதிப்பு: தொழில் நுட்ப உதவி எண்கள் அறிவிப்பு
X

பைல் படம்.

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, குறைந்த விலையில் உயர்தர கேபிள் டிவி சேவைகளைக் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 04.10.2007 அன்று துவங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செயலிழந்து காணப்பட்டது.

இதனையடுத்து 4 சொந்த டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறைகளுடன், கூடுதலாக 27 மாவட்டங்களில் அன்லாக் கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளைக் குத்தகைக்கு எடுத்தது. இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் (சென்னை தவிர) கேபிள் டிவி சேவை 02.09.2011 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகர கேபிள் டிவி சேவை 20.10.2012 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தற்போது அரசு கேபிள் டிவி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்நுட்ப உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு, அம்முறையிலும் இச்சிக்கலுக்குத் தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது, மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு சேவைகளை வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

இதுவரையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த தற்காலிக பிரச்சனையை சீரமைக்கும் வரை ஒத்துழைப்பு நல்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில் நுட்ப உதவிக்கு கிழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும் கேட்டு கொள்கிறோம்.

துணை மேலாளர்கள் பெயர்

தொடர்பு எண்கள்

மாவட்டங்கள்

மாரிமுத்து

9498017289

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி,

திருநெல்வேலி, விருதுநகர்

சுரேஷ்

9498017212

திருவள்ளூர், கோயம்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, திருப்பூர்

கௌதம் ராஜ்

9498002607

தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி,

மும்தாஜ் பேகம்

9498017287

திருவாரூர் அரியலூர், கடலூர், பெரம்பலூர்,

புதுகோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்

அருள் பிரகாஷ்

9498017283

சென்னை


Updated On: 21 Nov 2022 12:12 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!