ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 23 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 23 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்
X

பைல் படம்.

மதுரை கோட்டத்தில், 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாதவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மதுரை கோட்டத்தில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக (Unreserved) மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிறகு கூட்டம் கூடுவதை தவிர்க்க ரயில்களில் ரயில் பெட்டிகள் அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது சாதாரண இரண்டாம் வகுப்பு பயணசீட்டு பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக ரயிலில் இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு இல்லாத (Unreserved) பெட்டிகளாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ராமேஸ்வரம் -கோயம்புத்தூர் (16 617 ), மதுரை- புனலூர் (16729 ), புனலூர்- மதுரை (16730 ), திருநெல்வேலி -பாலக்காடு , யில் - பாலறுவி (16791), மதுரை- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்(20 602), தஞ்சாவூர் மெயின் லைன் வழி- மதுரை- சென்னை எழும்பூர் (22624), விரைவு ரயில்களில் மார்ச் 16 முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

அதேபோல் தூத்துக்குடி- மைசூர் (16235), ராமேஸ்வரம் -செகந்திராபாத்( 07686), மதுரை -கசக்குடா (17616), ஆகிய விரைவு ரயில்களில் மார்ச் 20 முதலும், தூத்துக்குடி- சென்னை முத்துநகர் (12694) ரயில் ஏப்ரல் 1 முதல், திருநெல்வேலி -சென்னை- நெல்லை ரயில்(12632), மதுரை -சென்னை- பாண்டியன் ரயில்( 12 638 ), செங்கோட்டை- சென்னை- பொதிகை ரயில் (12662 ), ராமேஸ்வரம்- சென்னை போட் மெயில் (16 852), ராமேஸ்வரம்- சென்னை -சேதுறையில்( 22 662 ) ஆகியவற்றில் ஏப்ரல் 16 முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் ஆக மாற்றப்படுகிறது.

ராமேஸ்வரம் -திருப்பதி ரயில் (16780), ஏப்ரல் 20 முதலும் , திருச்செந்தூர்- சென்னை செந்தூர் ரயில் (16106 ) ,செங்கோட்டை- சென்னை சிலம்பு ரயில்யில் (16182), மதுரை -திருவனந்தபுரம் அமிர்தா இரயில் (16344 ), காரைக்குடி- சென்னை -பல்லவன் ரயில் (12606), மதுரை- சென்னை வைகை ரயில்(12636), புனலூர் -குருவாயூர் ரயில் (16327), ராமேஸ்வரம் -திருச்சி ரயில்( 16850 ), ஆகிய விரைவு ரயில்களில் மே 1 முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் ஆக மாற்றப்படுகிறது.

இந்த தேதிக்கு பிறகு இருக்கை வசதி முன்பதிவு செய்த பயணிகள் ரயில் கட்டணத் தொகை முழுமையாக திருப்பி தரப்படும்.

இது சம்பந்தமாக அவர்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மதுரை இரயிவே கோட்டம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil