சென்னை விமான நிலையத்தில் தங்கம், அரிய வகை குரங்குகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தங்கம், அரிய வகை குரங்குகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் குரங்குகள்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை 56.94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,110 கிராம் தங்கம் மற்றும் வனவிலங்குகளை பறிமுதல் செய்துள்ளது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை 56.94 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,110 கிராம் தங்கம் மற்றும் வனவிலங்குகளை பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் மேத்யு ஜாலி தெரிவிக்கையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து இன்று சென்னை வந்த ஒரு ஆண் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 56.94 லட்சம் ரூபாய் மதிப்புடைய பசை வடிவிலான 1,110 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில் பேங்காங்கிலிருந்து இன்று வந்த இந்தியப் பயணியை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பயணி பையில் மறைத்து வைத்திருந்த 2 அரியவகை குரங்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அப்பயணி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!