திருச்சி அருகே ஆடு திருடர்களை விரட்டி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை

திருச்சி அருகே ஆடு திருடர்களை விரட்டி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை
X
திருச்சி அருகே ஆடு திருடர்களை விரட்டி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 56). நேற்று இரவு ரோந்து பணியியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர்.

ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்றுள்ளார். அந்த திருட்டு கும்பலை திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது ஓரு டூவீலரை தடுத்து நிறுத்திய சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அதில் இருந்த 2 திருடர்களை பிடித்துள்ளார்.

இதனைத் தெரிந்து கொண்ட மற்ற 2 டூவீலர்களில் சென்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் அவர்கள் இரண்டு பேரையும் விடுமாறு கூறியுள்ளனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விட முடியாது என கூற அவர்கள் வைத்திருந்த அரிவாளல் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்துள்ளார். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில் தான் அந்த வழியாக சென்றவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உடனடியாக 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து திருட்டு, கொலைக்கார கும்பலை பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். ஆடுதிருடர்களை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்