எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சாசனத்தின் இலக்கு -ஜெ .காமராஜ்

எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சாசனத்தின் இலக்கு -ஜெ .காமராஜ்
X

“இந்திய அரசியல் சாசன தினம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கு 

சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சாசனத்தின் இலக்கு - ஜெ .காமராஜ்

சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சாசனத்தின் இலக்கு - தென்மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ .காமராஜ்

சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவதே இந்திய அரசியல் சாசனத்தின் இலக்கு என்றும் மத்திய- மாநில அரசுகள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக செயலாற்றி வருவதாகவும் தமிழகம்- புதுவை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் கூறியுள்ளார்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகமும், ஒரத்தநாடு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து "இந்திய அரசியல் சாசன தினம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கை நேற்று நடத்தியது.

இந்தக் கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய ஜெ.காமராஜ், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்டது என குறிப்பிட்டார். அரசியல் சானத்திற்குட்பட்டே அனைத்து வகையான நலத்திட்டங்களும் இயற்றப்பட்டு, மத்திய - மாநில அரசுகளால் நிறைவேற்றப் படுவதாகவும் அவர் கூறினார். இதனடிப்படையில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தனிமனித பாதுகாப்பு என அனைத்தும் கிடைக்க அரசியல் சாசனத்தில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் சட்டப்பள்ளியின் உதவிப் பேராசிரியர் எஸ்.ரமேஷ், பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் உறுதி செய்கிறது நமது அரசியல் சாசனம். குறிப்பாக அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமை, கல்வி பெறும் உரிமை, போஸ்கோ சட்டம் என பல்வேறு வகையான அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றார்.

தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் கே. ஆனந்த பிரபு வரவேற்புரையாற்றினார். ஒரத்தநாடு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைத் திட்ட ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறைத்தலைவரும், ஆராய்ச்சி ஆலோசகருமான டாக்டர் கே. கலைச்செல்வி வாழ்த்துரையாற்றினார். தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் எஸ். அருண் குமார் நன்றியுரையாற்றினார். இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Tags

Next Story