விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம்: தமிழகஅரசு புது உத்தரவு
கோப்பு படம்
இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் , அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியன, பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுகிறது. இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது, உதட்டளவில் கூட பாடுவதில்லை.
மேலும், எந்தவித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல், இயந்திர கதியில் எழுந்து நிற்கின்றனர். எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுகிறது.
எனவே, விழாக்களில் இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்திற்கு பதிலாக, விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu