சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாடு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரத்தக மையத்தில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது. தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை வழங்கினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடைபெறுகிறது.
மாநாட்டின் தொடக்க விழாவான இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் 2ம் நாளான நாளை பல்வேறு நாடுகளின் தொழில்நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.
ஏற்கனவே உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனத்துடன் புரிந்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது அறிவிப்பு வெளியானது. அதன் விளைவாக அடிடாஸ் நிறுவனத்தின் “திறன் மற்றும் மேம்பாட்டு மையம்” சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சீனாவிற்கு பிறகு அதன் அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே சென்னையில்தான் அமைய உள்ளது.
இந்த நிலையில் 5.50லட்சம் அளவுக்கு முதலீகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் மூலம் 1ட்ரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu