கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை
ஜி.கே. வாசன்.
போதை இல்லா தமிழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின்படி அனைத்து நகரங்களிலும் மாவட்டங்களிலும் காவல்துறையினர் போதை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக எல்லா மாவட்டங்களிலும் பள்ளி ,கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா மற்றும் போதை பாக்குகள் விற்பனையை தடுக்கும் காவல் துறையினர் குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.
ஆனாலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கஞ்சாவும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. இதனை போலீசாரால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் சென்னையில் தீபாவளியன்று கஞ்சா போதையில் கார் ஓட்டிய இளைஞரால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிர் இழந்தார்கள்.
மேலும் அன்றாடம் சாலைகளில் நடைபெறும் விபத்துக்களுக்கு மூலகாரணமாக இருப்பது கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் இருக்கின்றன. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவர்களால் சாலை விதியை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டுபவர்கள் கூட உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு விடுகிறது.
இந்த சம்பவத்தை சுட்டி காட்டிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் போதை இல்லா தமிழகம் உருவாக்கப்பட வேண்டும் என்றால் முதலில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு அரசு இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu