நகர்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு

நகர்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு
X

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு

அடையாறு, கூவம் பகுதிகளை மறுசீரமைக்கும் பணிகள் ரூ.1500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

கோவை மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சி மேற்கொள்ள அனைத்து மக்கள் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்படும்

கடலரிப்பைத் தடுத்து, கடலோரப் பன்மயத்தை அதிகரித்து, கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மாசுபாட்டைக் குறைக்க "தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்" ரூ.2000 கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்

சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் இயற்கை தரம் வாய்ந்த நகர பொது சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்படும்.சென்னை தீவுத்தடலை மேம்படுத்த ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு

சென்னை வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு. வடசென்னை வளர்ச்சி திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும்

மதுரையில் ரூ.8,500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

கோவையில் அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் சாலை வரை மெட்ரோ ரயில் வழித்தடம் செயல்படுத்தபடும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - பூந்தமல்லி மெட்ரோ வழித்தடம் டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்

சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பாதைக்கு மேல் கட்டப்படும் இந்த மேம்பாலம் சாதனையாக அமையும். இதனால் சாலைப்போக்குவரத்து நெரிசல் குறையும்

மழைக்காலங்களில் பயணம் தடைபடாமல் இருப்பதற்கு, ரூ.996 மதிப்பில் கோடி 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்ட சாலைகளாக மாற்ற பணிகள் நடைபெற்று வருகிறது

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil