/* */

மகாகவி பாரதியாரின் முழுஉருவச் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்., விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகள் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.

HIGHLIGHTS

மகாகவி பாரதியாரின் முழுஉருவச் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
X

விழாவில் கலந்து கொண்ட மகாகவி பாரதியாரின் குடும்பத்தினர் மத்திய இணையமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 



மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மகாகவி பாரதியாரின் முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில் நேற்று திறந்து வைத்தார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சிலை திறப்பு விழா நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட மகாகவி பாரதியாரின் குடும்பத்தினர் மத்திய இணையமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு நடந்த கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் பரிசு வழங்கினார். தொடர்ந்து, நடந்த தேனீர் விருந்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்., விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகள் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டனர்.

Updated On: 15 April 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  3. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  4. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  5. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  9. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...