தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை காலமானார்
X

தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா.

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா ஹைதராபாத்தில் இன்று ரோசைய்யா உயிரிழந்தார்.

ஆந்திர அரசியலில் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான கொனிஜெட்டி ரோசய்யா கரு (88) இன்று மறைந்துள்ளார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இவர் 2009 முதல் 2010 வரை ஆந்திரப் பிரதேச முதல்வராகவும், இரண்டு மாதங்கள் கர்நாடக ஆளுநராகவும், ஆறு ஆண்டுகள் தமிழக ஆளுநராகவும் பதவி வகித்தார்.

அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்களுடன் அவர் தொடர்புகொண்டு நெருக்கமாக பணியாற்றினார். அவர் மறைந்த ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தார். மேலும் அரசியல் கட்சியையும் தாண்டி மூத்த அரசியல்வாதியாக பார்க்கப்பட்டார்.

Tags

Next Story
ஆசனூர்: சிறுத்தை குட்டிகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்!