/* */

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...! மீண்டும் சேவை துவங்கிய 34 ரயில்கள் என்னென்ன? பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என, அறிவித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் அதன் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...! மீண்டும் சேவை துவங்கிய 34 ரயில்கள் என்னென்ன? பட்டியல் வெளியீடு
X

34 ரயில்கள் மீண்டும் தமிழகத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்கள் பட்டியல் விவரம் வருமாறு:

ரயில் எண் 06405 / 06409 கொண்ட திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி), ரயில் எண் 06663 / 06664 கொண்ட மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி), ரயில் எண் 06681 / 06658 திருநெல்வேலி - செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி), ரயில் எண் 06684 / 06687 கொண்ட செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி) ஆகியவை வரும் ஜூலை 1ம் தேதி முதல் இயக்கப்படும்.

ரயில் எண் 06809 / 06810 கொண்ட திருச்சி - ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை (தினசரி), ரயில் எண் 06611 / 06612 கொண்ட திருச்சி - ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை (தினசரி) ஆகியவை ஜூலை 9ம் தேதி முதல் இயக்கப்படும்.

மேலும் ரயில் எண் 06401 / 06402 கொண்ட அரக்கோணம் - கடப்பா - அரக்கோணம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி) வரும் ஜூலை 27ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. ரயில் எண் 06831 / 06838 கொண்ட சேலம் - கரூர் - சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (சனிக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும்) வரும் ஜூலை 18ம் தேதி முதல் இயக்கப்படும். ரயில் எண் 06802 / 06803 கொண்ட கோவை - சேலம் - கோவை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (ஞாயிறு தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்)

ரயில் எண் 06881 / 06882 கொண்ட திருச்சி - கரூர் - திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (ஞாயிறு தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்), ரயில் எண் 06821 / 06822 கொண்ட சேலம் - கரூர் - சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (சனி தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்) வரும் ஜூலை 27ம் தேதி முதல் இயக்கப்படும். ரயில் எண் 16847 / 16848 கொண்ட மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் இருந்து ஜூலை 11ஆம் தேதியும், திண்டுக்கல்லில் இருந்து ஜூலை 12ம் தேதி இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 2 July 2022 12:06 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!