என்னாச்சு நித்திக்கு? சாப்பிட முடியலையாம், தூக்கம் வரலையாம்
உடல்நலம் சரியில்லாததால் டல்லாக இருக்கும் நித்யானந்தா
கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி விட்டதாகவும் அந்த நாட்டிற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அடிக்கடி வீடியோக்களில் நித்தியானந்தா பேசி வந்த நிலையில், திடீரென்று அவரின் வீடியோக்கள் எதுவும் வெளிவராததால் என்ன என்று பலரும் விசாரித்த போது தான் அவர் உடல் நிலை அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது
இதை அடுத்து நித்தியானந்தா உடல்நிலை குறித்து பலரும் பலவிதமாக சொல்லி வந்தனர். அவர் உயிருடன் இல்லை என்று சிலர் சில தகவல்கள் பதிவிட்டு வந்தனர். எப்போதும் வீடியோ மூலமாக பேசி வரும் அவர் இப்போது கடிதம் மூலமாக தனக்கு ஏற்பட்டது குறித்து சொல்லி வருகிறார்.
நான் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் தன்னைச் சுற்றி 27 மருத்துவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். பரிசோதனைகள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கடிதம் மூலமாக தெரிவித்தார்.
இதன் பின்னர் தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் இந்த கடிதத்தில் நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற தலைப்பில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கு கொரோனா கிடையாது புற்றுநோயும் கிடையாது இதய பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஒரு 18 வயது இளைஞனுக்கு இருப்பது போல் தான் எனக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். கல்லீரல் பிரச்னை இல்லை ரத்த அழுத்தம் இல்லை. சர்க்கரை நோய் இல்லை. கொலஸ்ட்ரால் இல்லை வைரஸ் தொடர்பான நோய்களும் இல்லை என்று சொல்லி இருக்கின்றார்
இத்தனையும் தனக்கு இல்லை என்று நித்தியானந்தா சொன்னாலும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். தூக்கமே வருவதில்லை. நான் எந்த உணவை வாயில் போட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் குமட்டுகிறது. பக்தர்கள் என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu