இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அமைச்சர்

இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அமைச்சர்
X

அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கொரோனாவிலிருந்து விடுபட்டு விட்டோம் என்ற எண்ணம் வேண்டாம், இன்னும் ஓராண்டு காலமாவது விதிமுறைகளை பின்பற்ற அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினர் கொரோனா ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரனா தொற்று பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதோடு ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என்ற எண்ணம் ருக்கும் வரகூடாது என்றும், இன்னும் ஓராண்டு காலமாவது முக கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் மழைகாலம் துவங்குவதை முன்னிட்டு டெங்கு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் , மருந்துகள் தெளித்து பல்வேறு மழைகால தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!