பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

பொண்ணை ஆறு 

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என வருவாய்த் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என வருவாய்த் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் மழை பெய்ததால் அங்குள்ள கலவகுண்டா உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. இதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வேலூர் மாவட்டம் பொன்னையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக நிரம்ப உள்ள நிலையில், தற்போது ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வேலூர் மாவட்ட எல்லையில் நுழைந்துள்ள நீர் விரைவில் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொன்னை ஆற்றங்கரையில் இருபுறமும் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் எனகேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து வருவாய்த் துறையினர் தண்டோரா மூலமும், ஆட்டோக்கள் மூலமும் இத்தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இருப்பதாகவும் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

பொன்னை ஆற்றில் வெள்ளம் வருவது, இந்த ஆற்றின் மூலம் விவசாய பாசனம் பெறும் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!