தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல்
X

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் தாக்கல் செய்து உரை ஆற்றினார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றவை:

*ரூ.9370.11 கோடி செலவில் கோவிட் நிவாரணத் தொகுப்பு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது

*ரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும்

*நடப்பு பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கீடு

*அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும்

*நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு

*ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்

*பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்

*அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும் - உலக வங்கி உதவி பெறப்படும்

*பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் காவிரி டெல்டாவில் செயல்படுத்தப்படும்

*நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3ம், 4ம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்

*ரூ.6000 கோடி மதிப்பில் இந்திய அளவில் கடல் மீன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது

*மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு

*ரூ.6.25 கோடி செலவில் 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான ஆய்வு

*காசிமேடு மீன்பிடித்துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்

*மீன்பிடிதுறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.433.97கோடி

*5 ஆண்டுகளில் சர்வதேச நீலக் கோடு சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்

*மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்த ரூ.143 கோடி ஒதுக்கீடு

*ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்று அமைக்கப்படும்

*ரூ.100 கோடி செலவில் ஈர நிலங்கள் இயக்கத்தை செயல்படுத்த நடவடிக்கை

*குறைந்தபட்சம் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் அறியும் வசதி ஏற்படுத்தப்படும்

*திட்டமதிப்பீடு, ஒப்பந்தபுள்ளி உள்ளிட்ட பணிகள் ஓராண்டுக்குள் முற்றிலும் மின்னணுமயமாக்கப்படும்

*79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை

*கிராமங்களில் அமைந்துள்ள 1.27கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை

*83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024 மார்ச்சுக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கை

*2021-22 ஆண்டில் ரூ.8017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டப்படும்

*கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வீடுகள் கட்டித்தரப்படும்

*கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ3548 கோடி ஒதுக்கீடு

*ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ₹400 கோடி ஒதுக்கீடு

*சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ₹3 கோடி மீண்டும் அளிக்கப்படும்

*கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ₹1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

*கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ₹100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

*ரூ1,000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

*ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள்

*100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் ஊதியத்தை ரூ300 வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தும்

*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கொரோனா சிறப்பு கடன் உட்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்

*திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைக்கப்படும்

*வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்த்தப்படும்.

*மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்

*இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்

*ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த இயக்கம் ஒன்று உருவாக்கப்படும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!