இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: 85 வயது விவசாயி தீக்குளித்து தற்கொலை
விவசாயி தங்கவேல்
சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவர் தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.
இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரை அடுத்த தாழையூரில் உள்ள திமுக அலுவலகம் முன்பு திமுக முன்னாள் விவசாய சங்க அமைப்பாளர் தங்கவேல் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தார்.
காலை 11 மணியளவில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தி.மு.க.வின் தீவிர உறுப்பினரான தங்கவேல், ஹிந்தியை கல்வி ஊடகமாக கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தங்கவேல் ஒரு பேனரில், "மோடி அரசே, மத்திய அரசே, எங்களுக்கு இந்தி வேண்டாம். நம் தாய்மொழி தமிழ், இந்தி கோமாளிகளின் மொழி. இந்தி மொழியை திணிப்பது மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். இந்தியை ஒழியுங்கள், இந்தியை ஒழியுங்கள், இந்தியை ஒழியுங்கள்" என எழுதியிருந்தார்
தமிழகத்தின் மீது இந்தி திணிக்கப்பட்டால், பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து தேசிய தலைநகரில் அக்கட்சி போராட்டம் நடத்தும் என தமிழக ஆளும் கட்சியான திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வருமான ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்
மேலும், மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணித்தால் வாய்மூடி மௌனமாக இருக்க மாட்டோம் என அக்கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கும் ஊடகம் இந்இவாகவும் நாட்டின் பிற பகுதிகளிலும் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்ததை அடுத்து போராட்டம் வெடித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu