மதுரை - மேட்டுபாளையம் ரயில் சேவையா? போலியான தகவல் என ரயில்வே மறுப்பு

மதுரை - மேட்டுபாளையம் ரயில் சேவையா? போலியான தகவல் என ரயில்வே மறுப்பு
X

கோப்பு படம் 

மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்படும் என்று பகிரப்படும் தகவல் போலியானது என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களிலும், முகநூல், வாட்ஸ் அப் வலைதளங்களிலும், மதுரையில் இருந்து பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வேயின் பெயரில் அறிவிப்பு பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இது முற்றிலும் போலியானது என்று, தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற பொய்யான தகவல் பரப்புபவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபன்ற போலி தகவல்களை நம்பி, யாரும் பகிர வேண்டாம் எனவும், தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Tags

Next Story