மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு

மின் இணைப்புடன்  ஆதார் இணைக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு
X

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (பைல் படம்) 

இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.

தமிழகத்தில் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மின் இணைப்பு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.

இதை அமைச்சர் செந்தில்பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார். ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture