வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினருக்கு காலாவதியான குடிநீர் வினியோகமா?

வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினருக்கு  காலாவதியான குடிநீர் வினியோகமா?
X

கோவையில், அதிமுகவினருக்கு காலாவதியான குடிநீர் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

கோவையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடக்கும் இடத்தில், அதிமுக தொண்டர்களுக்கு காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அமைச்சர் எஸ் பி வேலுமணி, தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக்கூறி, இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம், 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் கோவை மாவட்டத்தில், மாநகரில் 27 இடங்களிலும், புறநகரில் 14 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இதில், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ். பி. வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.

திமுக அரசு பொய் வழக்கு போடுவதாக கூறி சிறிது நேரம் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் காவல் துறையினரிடம் வாக்காவாதத்திலும் ஈடுபட்டனர். அதிமுக தொண்டர்களுக்கு அவ்வப்போது தேநீர், ரோஸ் மில்க், தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இதில், அதிமுக தொண்டர்களுக்கு காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. தண்ணீர் பாட்டில்களில் 2021 ஜீலை மாதம் தயார் செய்யப்பட்டதும், 6 மாதங்களுக்குள் குடிக்க உகந்தது என்பதும் அச்சிடப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள் கலாவதியானது தெரியாமல் தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!