கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்துல் ரசாக் மரணம்

அப்துல் ரசாக்
கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அப்துல் ரசாக் ( 78 ). நேற்று காலை, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை 4 மணி அளவில் அவரது சொந்த ஊரான செங்கோட்டை அருகே உள்ள வடகரை கிராமத்தில் உள்ள அரபாத் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ரசாக், 2001 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மைப்பிரிவு துணைத் அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். அவருக்கு ரஜப் முகம்மது, முஹம்மது செரிப் என்ற 2 மகன்கள் உள்ளனர். இறுதிச் சடங்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பாளையங்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன் உட்பட திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்துல் ரசாக், கடந்த 1977-1980 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இவருடைய பதவி காலத்தில் வடகரை ஆரம்ப சுகாதார நிலையம், வாவா நகரம் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கடையநல்லூர் நகராட்சியில் விரிவாக்க கட்டிடம், கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதி, ஏராளமான படித்த இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu