தேர்தல் தகராறு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது

தேர்தல் தகராறு  வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தேர்தல் தகராறில் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை, சென்னை மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில், வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி ஒருவரை தாக்கிய புகார் மீது தண்டையார்பேட்டை போலீசார் , இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர், கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தேர்தல் நாளன்று, வாக்குப்பதிவின் போது, தண்டையார்பேட்டை பகுதியில் ஒரு வார்டில், திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாகக்கூறி, ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது அங்கு இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அதிமுகவினரும், அவரை தாக்கியதாக, திமுகவினர் குற்றம்சாட்டினர்.

மேலும், தாக்கப்பட்டவரின் சட்டையை கழட்டி, கையை பின்புறம் கட்டி அவரை அழைத்துச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனிடையே, ஜெயக்குமார் எப்படி சட்டத்தை கையில் எடுக்க முடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறையினருக்கும் மாற்றுக் கட்சியினர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தற்போது ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது , அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture