முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்
X

பைல் படம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து பெற்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!