திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் துவக்கம்..
ESI Hospital Tirupur
ESI Hospital Tirupur-தமிழகத்தில் திருப்பூரில் நூறு படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் துவக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.
சென்னை அருகே கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தொழிலாளர் நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய மத்திய அமைச்சர், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் ராணிப்பேட்டையில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பீடி தொழிலாளர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு தொழிலாளர் நலன் இயக்குனரகம் மூலமாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். பீடி தொழிலாளர்களுக்கான 22 மருந்தகங்கள் மற்றும் ஒரு மத்திய மருத்துவமனை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வருவதாக குறிப்பிட்டார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் புதிய வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றும், இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் நிறுவனங்களில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு 6700 கோடிக்கும் மேல் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதில் தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகளுக்கு கிட்டத்தட்ட 787 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இபிஎப் சார்பில் பிரயாஸ் என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன்படி ஒரு தொழிலாளர் ஓய்வு பெறும் நாளன்று அவருக்கு சேர வேண்டிய வருங்கால வைப்புநிதி மொத்தமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக இ ஷ்ரம் தளம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் இணைபவர்களுக்கு ரு. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், இந்த தளத்தில் பதிவு செய்துள்ள 28 கோடி பேரில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். அனைத்து தொழிலாளர்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் தொழிலாளர்கள் நலனுக்காக இஎஸ்ஐ சி 2.0 திட்டத்தை முன்னெடுத்து பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த நிகழ்ச்சியில் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் இஎஸ்ஐ சந்தாதாரர்கள் ஒன்பது பேருக்கு தலா 40 ஆயிரம் மதிப்புள்ள ஹீமோபிலியா மருந்தை வழங்கிய அமைச்சர் ராமேஸ்வர் தெலி, E - Shram அட்டை, கொரோனாவால் இறந்த இஎஸ்ஐ சந்தாதாரர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி ஆகியவற்றையும் வழங்கினார்.
கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீன் பொறுப்பேற்பு
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக டாக்டர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான் பொறுப்பேற்றுள்ளார். 53 வயதான அவர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். மருத்துவமனை கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், தடய அறிவியலில் முதுநிலை மருத்துவப்பட்டம் பெற்றவர் ஆவார். நாசிக்கில் உள்ள மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டாளராகவும் நிதி மற்றும் கணக்கு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
மருத்துவர், நோயாளி உறவுக்கான மேலாண்மை படிப்பில் திலக் மகாராஷ்டிரா வித்யா பீடத்தின் பிஎச்டி பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார். ஐஐஎம் உட்பட பல்வேறு கல்வி நிறுவன படிப்புகளையும் நிறைவு செய்துள்ள அவர், மருந்துக்கு அப்பால் என்னும் நூலை எழுதியுள்ளார். மருத்துவ துறை மற்றும் சுகாதார அறிவியல் தொடர்பானவர்களுக்கு இந்த நூல் பெரிதும் பயன்படும்.
கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் 3 தசாப்தங்களுக்கும் மேலாக காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கல்லூரி கடந்த 2013 முதல் இயங்கி வருகிறது. கல்லூரியில் ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள், 15% அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 20% காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகளின் வார்டுகளுக்கும், மீதமுள்ள 65% மாநில அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகிறது. 2020-2021 கல்வியாண்டு முதல், எங்கள் நிறுவனத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு ஒதுக்கீட்டை உள்ளடக்கிய 125 இடங்களுக்கு NMC ஒப்புதல் அளித்துள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மயக்க மருந்து மற்றும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், நோயியல், நுண்ணுயிரியல், எலும்பியல் ஆகிய சிறப்புப் பிரிவுகளில் 2009 ஆம் ஆண்டு முதல் முதுகலை படிப்புகள் கல்லூரியில் வழங்கப்படுகின்றன. தற்போது மேற்கூறிய சிறப்புகளில் 27 முதுகலை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இந்த ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சிலின் முழு ஒப்புதலைப் பெற்றுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu