பெருந்துறை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை

பெருந்துறை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள்  தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்டவர்கள்.

பெருந்துறை அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெருந்துறையை அடுத்துள்ள, கோவை மெயின் ரோடு, மடத்துப்பாளையம், கோட்டையக்காடு பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மனைவி சரஸ்வதி(எ) மல்லிகா (60). இவருக்கு அமுதா(34), பூவிழி(30) என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமுதாவுக்கு திருமணமாகி அனன்யா(9) என்ற ஐந்தாவது படிக்கும் மகள் உள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தனது தாயார் வீட்டிலேயே, குழந்தையுடன் அமுதா வசித்து வருகிறார். பெருந்துறை அருகே உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்த அமுதா நேற்று உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை.

இந்நிலையில், வீட்டில் இருந்த அமுதாவின் தங்கை பூவிழி, வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாய், மகள் மற்றும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளனர். இன்று காலை வெகுநேரமாகியும், இவர்களது வீடு திறக்கப்படாமல் இருக்கவே அக்கம்பக்கத்தினர். சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த பொழுது, ஒரு தனியறையில் மல்லிகா தூக்கு போட்ட நிலையிலும், மற்றொரு அறையில் அமுதா மற்றும் குழந்தை அனன்யா ஆகியோர் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை போலீசார் சடலங்களை கைப்பற்றி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன், பெருந்துறை எஸ்பி கௌதம் கோயல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது..

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இறந்துபோன அமுதாவின் தங்கை பூவிழி, வீட்டில் உள்ளவர்களின் சம்மதம் இல்லாத நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால், அவர்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. தங்கை காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தாய் மற்றும் மகளுடன், பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா