கடத்தப்பட்ட 17 வயதான மாணவி திருமண கோலத்தில் மீட்பு

Erode news in tamil, Erode district news in tamil, Latest erode news, Erode news today live கடத்தப்பட்ட மாணவி திருமண கோலத்தில் மீட்பு
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூரைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த முதலாம் தேதி இரவு மாயமான நிலையில், அவர் திருமண கோலத்தில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்படி, மாணவி ராசிபுரத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழகி வந்துள்ளார். அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு பெண் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவி காரில் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரியவந்தது.
சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் மாணவியைக் கடத்திச் சென்ற கார் இருப்பது தெரிந்து, சிறுமியின் பெற்றோர் அங்கு சென்றபோது, காருடன் கும்பல் தப்பியது. இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆத்தூர் டி.எஸ்.பி. சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறுமியைத் தேடி வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மெட்டாலாவில் உள்ள ஒரு கோவிலில் சிறுமி இருப்பது தெரிந்து நேற்று விரைந்து சென்றனர்.
அங்கு திருமணம் முடிந்த நிலையில் இருந்த சிறுமியையும், அவருக்குத் தாலி கட்டிய நபரையும் போலீசார் கைது செய்து, ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகே முழு விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்றும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu