நீட் தேர்வில் ஈரோடு மாணவி தேவதர்ஷினி மாநில அளவில் முதலிடம்

நீட் தேர்வில் ஈரோடு மாணவி தேவதர்ஷினி மாநில அளவில் முதலிடம்
X

மாணவி தேவதர்ஷினி.

Neet Exam -ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி தேவதர்ஷினி நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

Neet Exam -நீட் தேர்வில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி தேவதர்ஷினி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், நீட் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டது. இதனை அறிமுகம் செய்ததலிருந்தே தமிழக அரசியல் தலைவர்களும், மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வால் அனிதா என்ற மாணவியை தொடர்ந்து பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் இரு முறை தீர்மானங்கள் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு காலதாமதம் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகினர். கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 1.32 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதனையடுத்து கடந்த செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தரவரிசை பட்டியலில், அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஈரோடு மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பொம்மன்பட்டி பகுதியை சேர்ந்த இவர் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை கடந்த ஆண்டு படித்து முடித்துள்ளார்.

தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வில் பங்கேற்று 518 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவருடைய தந்தை கடந்த 6 மாதத்திற்கு முன்பு உயிரிந்துவிட்டார். தாயார் கோடீஸ்வரி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..