/* */

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கமல்: நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கமல்: நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின்
X

பைல் படம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனைகளற்ற ஆதரவு தருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "ஒன்று கூடுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வென்று காட்டுவோம் ஈவிகேஎஸ் இளங்கோவன். #தமிழ்நாடு வாழ்க!" என்று பதிவிட்டுள்ளார்.

Updated On: 25 Jan 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...